லண்டனைச் சேர்ந்த நத்திங் நிறுவனம் தனது முதல் தயாரிப்பான வயர்லஸ் இயர்பட்ஸை ஜூலை 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
ஒன்-பிளஸ் நிறுவன துணை நிறுவனரான கார்ல் பெய், நத்திங் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் மனு ஷர்மா கூறியது,
இந்த தயாரிப்பை அறிமுகம் செய்வதில் பெருமிதம் அடைகிறோம். ஜூலை 27-ம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் நத்திங் இயர்பட்ஸ் அறிமுகமாகும்.
இதனை சந்தைப்படுத்த இந்திய இணைய வழி சந்தையான ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்.
ஜூலை 27-ம் தேதி வெளியிட உள்ள இந்த தயாரிப்பு நுகர்வோர் தொழில்நுட்ப சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.