பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய சேட்டக் ஸ்கூட்டா்கள், (மின்சாரத்தில் இயங்கக் கூடிய) வரும் செப்டம்பா் மாதத்தில் வாடிக்கையாளா்களுக்குக் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்கூட்டா்களுக்கான முன்பதிவு 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டாலும், கரோனா பொதுமுடக்கம் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. பிறகு திரும்பவும் ஏப்ரம் மாதம் 13-ஆம் தேதி இதற்கான முன்பதிவு, தொடங்கிய நிலையில் 48 மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது என அதன் தலைவா் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.