வீட்டிலிருந்தே பெண்கள் மாதம் ரூ.30,000 சம்பாதிக்கலாம்
கப் சாம்பிராணி செய்யத் தேவையான பொருட்கள் கரித்தூள், மரத்தூள், ஜிக்கட் பவுடர், எரா எரா பவுடர், வாசனை திரவியம் மற்றும் சாம்பிராணி பவுடர். இந்த பொருட்களை இணையதளத்தின் மூலம் எளிதில் பெறலாம்.
அரைகிலோ கரித்தூள், 200 கிராம் மரத்தூள், 200 கிராம் ஜிக்கட் பவுடர், 50 கிராம் எரா எரா பவுடர் ஆகியவற்றுடன் சிறிதளவு வாசனைத்திரவியம் சேர்ந்து தண்ணீர் கலந்து பேஸ்ட் போன்ற தன்மை வரும் வரை நன்கு கலக்க வேண்டும். பின்னர், சாம்பிராணி அச்சு இயந்திரத்தில் வைத்து இயந்திரத்தை ஒரு சுத்து போட்டால் கப் சாம்பிராணிக்கான கப் ரெடியாகிவிடும். அதை சிறிது நேரம் வெயிலில் காயவைத்து பாதி காய்ந்தவுடன் சாம்பிராணி பவுடரை கப்பில் கொட்டி மீண்டும் வெயிலில் காயவைத்தால் போதும் கப் சாம்பிராணி ரெடி. ரெடிமேட் பாக்ஸ் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.
ஒரு பாக்சுக்கு 12 கப் சாம்பிராணி வீதம் மார்க்கெட்டில் 25 முதல் 35 வரை தரத்தைப்பொறுத்து விற்பனை செய்ய முடியும் ஒரு பாக்சுக்கு எப்படியும் ரூ.10 வரையில் லாபம் ஈட்ட முடியும்.
ஒரு நாளைக்கு 100 பாக்ஸ்கள் வரையில் விற்பனை செய்ய முடியும். கப் சாம்பிராணி இயந்திரத்தின் விலை ரூ.20 ஆயிரம் மற்றும் இதர பொருட்களை ரூ.10 ஆயிரத்திலும் வாங்கிவிட முடியும். இந்த தொழிலுக்கான முதலீடு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் மட்டுமே. ஆனால், சீசன் நேரங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.1,500 லாபம் மட்டும் ஈட்டலாம்.
வீட்டிலிருந்தபடியே குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் கப் சாம்பிராணி தொழில் செய்து இல்லத் தரசிகள் பயன்பெறலாம்.
-பிரபு