Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உலகத்தரத்தில் திருச்சியில் மணமக்களுக்கு தயாராகும் ஆடைகள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

உலகத்தரத்தில் திருச்சியில் மணமக்களுக்கு தயாராகும் ஆடைகள்

திருமணங்களில் மணப்பெண் தனக்கான வருங்கால கணவன் குறித்த தனது சிந்தனையை எப்படியெல்லாம் வார்த்தெடுக்கிறாரோ அதற்கு இணையானது, அவள் மணமேடையில் தன்னுடைய ஆடை, ஆபரணங்கள், தோற்றத்திற்கு தரும் முக்கியத்துவம்.

முந்தைய காலத்தில் திருமணங்கள் 3 நாள், 5 நாள் என நடைபெறும். அந்நிலை மாறி இன்று ஒரே நாளில் (முதல் நாள் மாலை 4 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 4 மணிக்குள்) முடிந்து விடுகிறது. என்றாலும்  ஒரு நாள் திருமண நிகழ்வுகள், நிச்சயதார்த்தம், ரிசப்ஷன், திருமண சடங்குகள், தொடர்ந்து நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகள் என நான்கு நிகழ்வுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. சில திருமணங்களில் மணமகள் கையில் மருதாணி வைக்கும் நிகழ்வு, மெஹந்தி என தனியாக நடத்தப்படுவதும் உண்டு.

ஜீலை 16-31, 2021 பிசினஸ் திருச்சி இதழில் வெளிவந்தது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

ஒவ்வொரு நிகழ்விற்கும் மணமக்கள் தாங்கள் அணியப் போகும் ஆடைகள் குறித்த முன்னேற்பாடுகள் மிகத் தீவிரமாகவே இருக்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்திற்கு ஒரு புடவை. திருமண சடங்கின் போது விலை உயர்ந்த பட்டுப் புடவை என்பதோடு ஆடை தேவைகள் முடிந்து போனது.

தற்போது, மெஹந்தி சாரி, ரிசப்ஷன் நிகழ்வுகளுக்கு லெஹங்கா, திருமண சடங்கிற்கு பட்டுப் புடவை, தொடர்ந்து நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு முந்தானை மாற்றி அணியும் பேன்ஸி புடவை என விதவிதமான ரகங்களில் ஆடைகள் அணிந்து மணமகள் மேடையில் தோன்றுவாள்.  மணமகனும் அப்படியே..! அத்தகைய ஆடை ரகங்களை ஜவுளிக் கடைகளில் வாங்கும் போது, வைக்கப்பட்டுள்ள ரெடிமேட் ஆடைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாக நேரிடும்.

ஆனால் தற்போது இந்நிலை மாறி மணமகள்/மணமகனின் எண்ணத்திற்கு முழுமையான வடிவம் கொடுக்கவென்று ஆடைகளை வடிவமைக்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளன. அவற்றில் உள்ள முன்னணி நிறுவனங்களில், திருச்சியின் முதன்மையான ஒரு நிறுவனம் தான் FRONTIERS, FASHION LOUNGE.

.திருச்சி, மதுரை ரோடு, மரக்கடை பகுதியில் ஸ்டார் திரையரங்கம் அருகாமையில் உள்ளது FRONTIERS. இந்நிறுவனம் குறித்து எம்.பி.ஏ. பட்டதாரியான இதன் உரிமையாளர் திருமதி சஃபியா பாரியை சந்தித்து உரையாடினோம்.

ஏதாவது ஒரு பிசினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும். என் குடும்ப பாரம்பரிய ‘ஜீ’னாகவும் இருக்கலாம். மணமக்களுக்கான பிரத்யேக ஆடைகள் தயாரிப்பதில் ஏன் ஈடுபடக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்நிறுவனத்தை தொடங்கினோம். எக்ஸ்க்ளுஸிவ் ஷோரும் என்பார்களே அப்படியான ஒரு பிரத்யேக ஆடை வடிவமைப்பு நிறுவனமாகவே இதை தொடங்கி நடத்தி வருகிறோம்.

ஜீலை 16-31, 2021 பிசினஸ் திருச்சி இதழில் வெளிவந்தது.

உங்கள் வாடிக்கையாளர்கள் யார்..?

திருமணத்திற்கு ரெடிமேட் ரகங்கள் வேண்டாம். ‘எனக்கென்றெ பிரத்யேகமாக திருமண ஆடைகள் தயாரித்து அணிய வேண்டும்’ என நினைப்பவர்கள் தான் எங்கள் வாடிக்கையாளர்கள். அவர்கள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்வது தான் எங்கள் பணி.

திருமணங்களில் பெரும்பாலும் மேடையில் மணமகனைவிட மணமகள் ரொம்பவும் ஈர்ப்புடன் பெரும் அலங்காரத்துடன் தனித்து தெரிவார். ஆனால் மணமகளுக்கு நிகரான ஆடை, அலங்காரத்துடன் மணமகன் அணிந்திருப்பதில்லை. இது இருவரையும் வேறுபடுத்திக் காட்டும்.

இதை  கருத்தில்  கொண்டு  நாங்கள் மணமகளின் ஆடைக்கு இணையான வண்ணங்களில், வடிவங்களில் மணமகனுக்கும் ஆடைகள் தயார் செய்து தருகிறோம். மணமகளை அழைத்து வரும் தோழிகள் ஒரே மாதிரியான  மேட்சிங் செட் ஆடைகள் அணிவதை பார்த்திருப்பீர்கள். அத்தகைய ஆடைகளையும் நாங்கள் வடிவமைத்து தயார் செய்து தருகிறோம்.

உங்கள் வாடிக்கையாளர்களை எப்படி அணுகுகிறீர்கள்..?

சிலர் ஆடை வடிவமைப்பு, ரகங்கள் குறித்து முழுத் தெளிவுடன் வருவார்கள். சிலர் அரைகுறையாக தெரிந்து வைத்திருப்பார்கள். சிலர், “இது குறித்து  எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்கு எது செட்டாகும் என நீங்களே சொல்லுங்கள்” எனக் கூறுவார்கள். அதற்கேற்ப எங்களது அணுகுமுறை அமையும்.

எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆடைகளின் வண்ணம், வடிவம், வேலைப்பாடுகள் முதலில் எனக்கு திருப்திகரமாக அமைய வேண்டும். ஏதாவது ஒரு குறை தென்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட தயாரிப்பு விலையையும் மீறி அதிகமானாலும், அதை நான் பொருட்படுத்தாமல் மறுசீரமைப்பேன். தயாரிக்கப்படும் ஆடைகள் முதலில் என்னை திருப்திப்படுத்த வேண்டும். பிறகே அது கஷ்டமரை திருப்திபடுத்தும் என்ற எண்ணம் கொண்டவள் நான். எங்கள் நிறுவனத்திற்குள் வரும் பொழுது கஷ்டமர்களாக வருவார்கள். செல்லும் போது அவர்களின் குடும்பத்தில் ஒருவராக நினைத்துச் செல்வார்கள். அப்படியானது தான் எங்களது அணுகுமுறை.

இந்த ஆடை வடிவமைப்பு, கலை நேர்த்தி எப்படி சாத்தியமாகிறது..?

எங்களிடம் உள்ள ஆடை வடிவமைப்பாளர்கள் அனைவரும் எக்ஸ்பர்ட்ஸ். என்ன வடிவங்களில் உங்கள் ஆடைகள் குறித்த கற்பனை விரிகிறதோ அதை நிஜத்தில் கொண்டு வரும் திறனுடன் கூடிய வடிவமைப்பாளர்கள் எங்கள் நேர்த்திக்கு காரணமாக சொல்லலாம்.  அவர்கள் எங்களுடனே தங்கி பணிபுரிகிறார்கள். இதனால் கொரோனா காலத்திலும் நடைபெற்ற திருமணங்களுக்கு, வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் ஆர்டர்கள் பெற்று தங்குதடையின்றி குறித்த நேரத்தில் விரும்பிய வண்ணங்களில், வடிவங்களில் ஆடைகளை தயாரித்து வழங்கி நற்பெயர் பெற்றோம். மாடலிங் துறையில் உள்ளவர்களும் எங்களது பிரத்யேக ஆடை வடிவமைப்பை பயன்படுத்துகிறார்கள். ப்ரீத்தி ஷர்மா, மௌனிகா, யமுனா, அனு, ஸ்ரூதிகா என பல முன்னணி தொலைக்காட்சி நட்சத்திரங்களும் எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து மாடலிங் செய்துள்ளார்கள்.

மணமக்களுக்கான ஆடை வடிவமைப்பு பெரும்பாலும் வடநாட்டு ஆடை கலாச்சாரத்தினை ஒத்ததாகவே உள்ளதே.. தமிழகத்திற்கென்று ஆடை வடிவம் இல்லையா..?

3

இல்லையில்லை. நாம் அவர்கள் பயன்படுத்தும் மணிகள், பாசி ரகங்கள், கண்ணாடி இழைகள், குந்தன் செட் என்பார்களே.. அவற்றை பயன்படுத்துவதால் அப்படி தெரிகிறது. நாம் தயாரிக்கும் ப்ளவுஸ், ஆடை ரகங்களில் லட்சுமி, சரஸ்வதி, மயில் என பலவித உருவங்கள் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு ஒத்ததாக இருக்கும். வட, தென் கலைகளின் வடிவங்கள் ஒருங்கே பெற்ற ஆடைகள் என்று சொல்லலாம்.

மணமக்களுக்கான ஆடைகள் தயாரித்து தருவது மட்டும் தானா உங்கள் பணி..?

இல்லையில்லை PARTY  WEAR DRESS, MATERNITY WEAR, PHOTOSHOOT  DESIGNER WEAR, MOM & DAUGHTER  DUO DRESS, WESTERN OUTFITS, EVENING GOWNS, BIRTHDAY WEARS என பலவிதமான நிகழ்வுகளுக்கும் தேவையான ஆடைகளை வடிவமைத்துத் தருகிறோம்.

ஜீலை 16-31, 2021 பிசினஸ் திருச்சி இதழில் வெளிவந்தது.

விலை..?

ஒவ்வொரு ஆடைகளின் தரத்திற்கும் வடிவத்திற்கும் ஏற்ப மாறுபடும். ரூ.10,000த்திலிருந்து தொடங்குகிறது. ப்ளவுஸ் ரகங்களே ஏராளமாக உள்ளது. திருமணத்திற்கு பின்பான நிகழ்ச்சிகளில், திருமண ஆடைகளை அணிந்து செல்வது சிரமமாக இருக்கும்.. ஒரு நாளைக்கு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என உணர்பவர்களுக்கென்றே, ஒரு சில ஆடைகளை வாடகைக்கும் வழங்குகிறோம். அத்துடன் மணமக்கள் அலங்கார நகைகளும் வாடகைக்கு வழங்குகிறோம்.

எங்களிடம் ஒரு வசதி உள்ளது. இரண்டாவது தளத்தில் உள்ள எங்கள் FRONTIERS-ல் ஆடை வடிவமைத்து, முதல் தளத்தில் உள்ள ZAZZLE  BRIDAL STUDIO-வில் அலங்காரம் செய்து, தரை தளத்தில் உள்ள AMK BANQUET ஹாலில் திருமண, வரவேற்பு நிகழ்ச்சிகளை முடித்துச் செல்லலாம். அதாவது.. ஒரே குடையின் கீழ்..!

எப்படி பிசினஸ் நடக்கிறது..?

பெரும்பாலும் ஆன்லைன் மூலம் ஆர்டர் வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்த்து வருவார்கள். சென்னை, மதுரை, தஞ்சை, திருநெல்வேலி என தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் வாடிக்கை யாளர்கள் இன்ஸ்டாகிராம் பார்த்து ஆன்லைனில் ஆர்டர் தருகின்றனர். எங்கள் தயாரிப்பு குறித்து நான் சொல்வதைவிட நாங்கள் தயாரித்து வழங்கிய ஆடைகள் அணிந்தவர்களின் புகைப்படங்களை எங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் (https://www.instagram.com/frontiers_fashion_lounge) பாருங்கள். நான் பேசுவதைவிட அவைகள் அதிகம் பேசும்.

FRONTIERS அடுத்த கட்ட வளர்ச்சி.. எதிர்காலத் திட்டம் ஏதேனும் உள்ளதா..?

இல்லாமல் எப்படி..? FRONTIERS -ஐ இரண்டு பிரிவாக செயல்படுத்தும் திட்டம் உள்ளது. அவற்றில் ஒன்று இந்திய அளவில் உள்ள அனைத்துவிதமான பாரம்பரிய, கலாச்சார நவநாகரீக ஆடைகள் வடிவமைக்கப்பட்டு தயார் செய்யப்படும்.

மற்றொரு பிரிவு வெளிநாட்டு கலாச்சார ஆடைகள், நவீன ரக மாடல்கள் பிரத்யேகமாக தயாரித்து வழங்கப்படும். இந்தியாவில், முக்கிய நகரங்களில் கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். வெளிநாடுகளிலும் கிளைகள் தொடங்கும் திட்டம் உள்ளது.

வெளிநாடுகளிலுமா.?

ஆமாம்.. வெளிநாடுகளில் இந்திய ஆடை ரகங்களுக்கென்றே தனி மவுசு உண்டு. தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் மணமகள் அணியும் லெஹங்கா ஆடை ரகங்கள் வெளிநாடுகளில் மணமகள் அணிவது போன்றதே. அதே போல் நமது பாரம்பரிய பட்டு ரகங்கள், அதற்கு அணியும் ப்ளவுஸ் மாடல்கள் வெளிநாடுகளில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

FRONTIERS குறித்து மேலும் விபரங்கள் அறிய : 73958 30773 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

ஒரே குடையின் கீழ்!  அனைத்து வசதிகளும்…

*   2வது தளத்தில் உள்ள எங்கள் உள்ள FRONTIERS FASHION LOUNGE-ல் ஆடை வடிவமைத்து, முதல் தளத்தில் ZAZZLE  BRIDAL STUDIO-வில் அலங்காரம் செய்து, தரை தளத்தில் உள்ள AMK BANQUET ஹாலில் திருமண, வரவேற்பு நிகழ்ச்சிகளை முடித்துச் செல்லலாம்.

*   எங்கள் நிறுவனத்தில் திருமணத்திற்கான  ஆடை கள் மற்றும் நகைகள் வாடகைக்கு கிடைக்கின்றது.

*   மாடலிங் துறையில் உள்ள வர்களும் எங்களது பிரத்யேக ஆடை வடிவமைப்பை பயன்படுத்துகிறார்கள்.

– எஸ்.கோவிந்தராஜன்

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.