நெட்டில் எழுதியும் வருமானம் பார்க்கலாம்…
இன்டர்நெட் ஒரு வரப்பிரசாதம். அதாங்க நெட்ல பிளாக் எழுதுவது. ‘பொழுது போகாதவர்களின் இணைய விளையாட்டு அது!’ என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ.
போதுமான அளவு பார்வையாளர்கள் உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், கூகுள் நிறுவனமே உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும்..! ஆம், தன்னுடைய வாடிக்கையாளர்களின் விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள் கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பிரதிஉபகாரமாக, தன்னுடைய விளம்பர வருமானத்தில் உங்களுக்கு விகிதாச்சார பங்கு தரும் கூகுள்! இதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து காசு பார்ப்பவர்கள் அயல்நாடுகளில் எக்கச்சக்கம்.