Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தொழில் தொடங்க 25 % மானியம், வங்கி கடன் உதவி-நாகை கலெக்டர்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு்ள்ள அறிக்கையில்,

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

நாகை மாவட்டத்தில் உள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவினரும், 18 வயது முதல் 45 வயது வரையிலான சிறப்பு பிரிவினரான பட்டியலிடப்பட்ட இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன் பெறலாம்.  இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சம் வரையிலும், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும்.

திட்ட முதலீட்டில் சொந்த முதலீடாக பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்) 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

எனவே பயன் பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இது தொடர்பான விவரங்களுக்கு நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 8925533969  இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.