தபால்கள், பார்சல்கள் அனுப்பியதன் மூலம் ரூ.1.65 கோடி வருவாய்!
75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலையத்தில் மத்திய மண்டல தலைவர் கோவிந்தராஜ் கொடியேற்றி பேசும் போது,
“அஞ்சல் குறியீடுகளில் தவறான முகவரிகள், ஒரே மாதிரியான இடப் பெயர்கள் மற்றும் பல்வேறு மொழிக் குழப்பத்தை நீக்கவும் மேலும் அஞ்சல் பட்டுவாடாவை எளிமையாகவும் 1972-ம் ஆண்டு அஞ்சல் குறியீட்டு முகவரி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் பல்வேறு குழப்பங்கள் நீக்கப்பட்ட அஞ்சலை உரிய நபரிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குறியீடானது 50வது ஆண்டு காலத்தில் அடி எடுத்து வைக்கிறது. மத்திய மண்டலத்தில் 556 குறியீடுகளைக் கொண்டு பட்டுவாடா செய்யப்படுகிறது.
அனைத்தும் உடனடியாக சரிபார்க்கப்பட்டு மதியத்திற்கு மேலே தபால்காரர் கொண்டு இரண்டு முறை பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் வரை 6,000 தபால்கள் மற்றும் பார்சல்கள் அனுப்பியதன் மூலம் ரூ.1.65 கோடிக்கு வருவாய் ஈட்டி உள்ளது” என்றார்.