பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு
பட்டியலினத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மத்திய அரசு பணியிடங்களை நிரப்பும் பணிகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கண்காணித்து வருகிறது.
பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 28,435 பணியிடங்களில் 14,366 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட 22,016 பணியிடங்களில் 12,612 பணியிடங்களும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 28,562 பணியிடங்களில் 15,088 பணியிடங்களும் காலியாக உள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத், கோவா, ஜார்கண்ட், உத்தரகண்ட், அஸ்ஸாம், மிஸோராம் ஆகிய மாநிலங்களிலும் தில்லி, ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசங்களிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பௌமிக் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.