கடந்த 2019-20 பருவத்தில், எந்த நிபந்தனைகள், விதிகளின் அடிப்படையில் ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்பட்டனவோ, அதே விதிமுறைகள், நிபந்தனைகளின் அடிப்படையில் 2020-21 பருவத்திலும் ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கான பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடி பலன் பரிவர்த்தனை திட்டத்தின் மூலம் செலுத்தப்படும். 12 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆப்பிள்களை மத்திய கொள்முதல் முகமையான தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, மாநில முகமையான, ஜம்மு-காஷ்மீர் தோட்டக்கலை துறையை சேர்ந்த திட்டமிடுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் இயக்குநரகத்தின் மூலம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு உத்தரவாதத் தொகையான ரூ.2,500 கோடியை இந்த செயல்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.