Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

2021-22 நிதிநிலை அறிக்கை நம்பிக்கை தரும் தொழில்துறை

1

2021-22 நிதிநிலை அறிக்கை நம்பிக்கை தரும் தொழில்துறை

ரூ.5,00,000 கோடி கடன் சுமையுடன் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு அனைத்துவிதங்களிலும் வருவாய் ஈட்டவும், வாய்ப்புள்ள இடங்களில் செலவினங்களை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையின் மூலமும் செலவீனங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

4

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக 2021—22ற்கான நிதிநிலை அறிக்கை காகிதமில்லா அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரின் இருக்கைக்கு முன்பும் கணினியும் கையடக்க கணினியும் வைக்கப்பட்டிருந்தன. இதற்கான செலவீனங்களை தமிழக அரசு 40 சதவீதமும் மத்திய அரசு 60 சதவீதமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் பட்ஜெட் புத்தகம் அச்சிடும் செலவின்றி அரசுக்கு செலவு பாதியாக குறைந்துள்ளது. நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் சுமார் 3 மணிநேரம் பட்ஜெட் அறிக்கையினை வாசித்துள்ளார்.

3

தமிழக அரசிற்கு மொத்த கடன்கள் ரூ.5,77,987 கோடியாக உள்ளது என நிதியமைச்சர் சமீபத்தில் வெள்ளை அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பொது மக்களிடையே பல்வேறு விதமான அச்சத்தை ஏற்படுத்தியது. பேருந்து கட்டணம் உயரும்., மின் கட்டணம் உயரும்., வரி உயரும் என கருத்து பரிமாறி வந்த நிலையில் எந்தவித வரி உயர்வோ, விலை உயர்வோ அறிவிக்கப்படாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக பெட்ரோல் மீதான வரி குறைப்பு ஒரு லிட்டர் ரூ.3 குறைய வழிவகுத்துள்ளது. பெட்ரோல், டீசல் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கிறது. ரூ.3 விலை குறைப்பால் ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும் என்கிறார் நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன்.

இவர் குறிப்பிட்டதொரு விஷயம் மிகவும் கவனிக்கத்தக்கது. “இந்திய ரிசர்வ் வங்கி பேமென்ட் பேங்க் என்ற ஒரு முறையை கொண்டு வந்துள்ளது. அந்த முறையை பின்பற்றி ஏற்கெனவே நம்மிடம் உள்ள கருவூலங்கள், சார் கருவூலங்கள் வருங்காலத்தில் வங்கிகளாக மாற்ற முடியுமா என்ற எண்ணம் அரசிடம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இம்முயற்சி என கேள்வி எழுப்பிய போது, “அரசு பல்வேறு வகைகளில் பணம் திரட்டி வங்கியில் வைத்திருக்கும். மேலும் வட்டி கொடுத்து கடன் வாங்கி அந்த பணத்தை வேறு ஒரு வங்கியில் வைத்திருப்பது நல்ல முறை அல்ல. அவ்வாறு இல்லாமல் வாங்கும் நிதி அரசு கணக்குகளில் இருந்து வெளியே போகாமல் இருப்பதற்கான வழி தான் இந்த பேமெண்ட் பேங்க்” என்றார். இது இந்த பட்ஜெட் விஷயத்தில் நாம் கவனிக்கத்தக்க விஷயமாகும்.

நம்பிக்கை தரும் விஷயம்
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு கடன் அளித்து அவர்கள் தங்களது கடன்களை மறுகட்டமைப்பு செய்ய முன்வந்தால் அரசு கடன் உத்தரவாதத்துடன் நிதி நிறுவனங்களின் உதவியுடன் கடன் வழங்கப்படும்”
என குறிப்பிடப்பட்டுள்ளது நம்பிக்கை
அளிப்பதாக உள்ளது.

 

ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருந்தும் ஆட்சியமைத் தவுடன் பெண்களுக்கு பேருந்தில் பயண சலுகை, ரேஷன் அட்டைக்கு வழங்கப்பட்ட கொரோனா நிதியாக வழங்கிய ரூ.4,000 ஆகியவை மேலும் அரசினை கடன் சுமைக்கு சிக்க வைத்துள்ளது. ஆட்சியமைத்த மூன்று மாதத்தில் ஒட்டுமொத்த செலவினங்களுக்காக இது வரை ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது தமிழக அரசு. இந்த நிதி ஆண்டில் உத்தேசமாக ரூ.92,484 கோடி கடன் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சென்ற அதிமுக ஆட்சியில், அன்றைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இடைக்கால பட்ஜெட் அறிக்கையில், ரூ.41,417 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என கணிக்கப்பட்டது. அது இப்போது ரூ.58,692 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

பட்ஜெட் விஷயத்தில்
கவனிக்கத்தக்க விஷயம்
“இந்திய ரிசர்வ் வங்கி பேமென்ட் பேங்க் என்ற ஒரு முறையை கொண்டு வந்துள்ளது. அந்த முறையை பின்பற்றி ஏற்கெனவே நம்மிடம் உள்ள கருவூலங்கள், சார் கருவூலங்கள் வருங்காலத்தில் வங்கிகளாக மாற்ற முடியுமா என்ற எண்ணம் அரசிடம் உள்ளது”

 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்றம் பெற்றால் மட்டுமே நிதிப்பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது என்பதே இன்றைய நிலை. ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் குறு, சிறு நிறுவனங்கள் பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் தற்போது வெளியான பட்ஜெட்டில், “மாநில அளவிலான கடன் உத்திரவாத திட்டத்தை குறு சிறு மற்றும் நிறுவனங்கள் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெறும் வகையில் செயல்படுத்தும்.

2

இந்நிறுவனங்கள் வணிக திறனின் அடிப்படையில் நவீன நிதி தொழில்நுட்ப நிறுவனங்களும் கடன் வழங்க வசதியாக மின்னணு தகவல் தரவுகள் அடிப்படையிலான கடன் மதிப்பீட்டு முறை ஏற்படுத்தப்படும். இந்நிறுவனங்களுக்கு கடன் வழங்க தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு கடன் அளித்து அவர்கள் தங்களது கடன்களை மறுகட்டமைப்பு செய்ய முன்வந்தால் அரசு கடன் உத்தரவாதத்துடன் நிதி நிறுவனங்களின் உதவியுடன் கடன் வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

தமிழக பட்ஜெட் குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் ரா.இளங்கோ, செயலாளர் சே.கோபால கிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில்,

ரா.இளங்கோ

“இந்த நிதிநிலை அறிக்கை சிறு, குறு தொழில்களுக்கு மிகுந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஊட்டுவதாக இருக்கிறது. ஒருங்கினைந்த பேருந்து நிலையம் TUFIDCO மூலம் நிறைவேற்றப்படும் எனவும், வணிக வளாகம் அமைப்பதினை உறுதிபடுத்தியுள்ளதும் மனநிறைவு தருகின்றது.

 

சே.கோபால கிருஷ்ணன்

சிறு மற்றும் குறு தொழில்களை மேம்படுத்த ரூ.1,500 கோடியில் 4500 ஏக்கர் நில வள வங்கி ஏற்படுத்தப்படுவது மாநில வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மணப்பாறையில் SIPCOT வளாகத்தில் உணவு பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு, COVID-19 காலத்தில் நலிவுற்ற சிறு,குறு தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பு செய்ய உதவுவதாக வெளியான அறிவிப்பு, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் தொழிற்பேட்டையில் (மனைபட்டா) விற்பனை பத்திரம் பெறாதவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, SIDCO தொழிற்பேட்டைகளில் உள்ள காலிமனைகளை விரைவில் தொழில்துறையினருக்கு ஒதுக்கீடு செய்ய விரைவில் நடவடிக்கை எடுப்பது,குறு மற்றும் சிறு தொழில் நிறுவன ஊழியர்கள் பயன்பெறும் வண்ணம் குடியிருப்பு உருவாக்க திட்டம் வகுக்கப்படும் என்ற அறிவிப்பு போன்றவையும் ஒன்பது மாவட்டத்தில் தொழில் பூங்கா (SPICOT ) அமைக்க இருப்பது தமிழகம் தொழில்துறையில் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது” என்றனர்.

தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜூலு தெரிவிக்கையில்,

கோவிந்தராஜுலு

“தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட 2021–22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி குறைப்பு காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்பது மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பாகும். சாலை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு 54.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. நிலுவையில் உள்ள 28 ஆயிரம் கோடி வரியை வசூலிக்க சமாதான் திட்டம் கொண்டு வரப்படும் என்பதில் வரி செலுத்துவோருக்கு அரசிற்கும் உதவிகரமானதாக இருக்கும்.
திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு திருச்சி மாவட்ட வணிகர்கள், பொது மக்கள் அனைவராலும் பாராட்டக் கூடிய அறிவிப்பாகும்.

திருச்சியில் வேலைவாய்ப்பை அதிகரித்த பட்ஜெட்:
2009ல் திமுக ஆட்சியின் போது பஞ்சப்பூர் பகுதியில் 244.28 ஏக்கரில் ஒருங்கிணைந்த பேரந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் 10 ஆண்டுகளில் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது மீண்டும் ஆட்சி அமைத்துள்ள திமுக, 2009ல் துணை முதல்வராக ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான இடத்தை பார்வையிட்டு மு.க.ஸ்டாலின், இப்போது முதல்வராக முதல் நிதிநிலை அறிக்கையிலேயே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது, திருச்சி மாவடட வர்த்தகத்திற்கு பெரும் பயனாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையும் பட்சத்தில் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில பல்வேறு கடைகள், உணவு விடுதிகள், தங்கு மிடங்கள் உருவாகும் போது இப்பகுதியிலும் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும் வேலை வாய்ப்புகளும் பெருகும்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையை மேற்கோள் காட்டி வரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற அறிவிப்புகள் இருக்குமோ என்று தமிழக மக்கள் சற்றே பதற்றத்தில் இருந்த நிலையில் அத்தகைய கட்டண உயர்வு அறிவிப்புகள் ஏதுமில்லாத நிலையில் சிறப்பான அறிவிப்புகள் பலவற்றைக் கொண்ட இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்க பட்ஜெட் ஆகும்.

-எஸ்.கோவிந்தராஜன்

5

Leave A Reply

Your email address will not be published.