ஸ்டார்அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை கூற 28 உறுப்பினர்களை கொண்ட குழு
நாட்டில் தொடக்க நிறுவனங்களை ஏற்படுத்த அரசுக்கு ஆலோசனை கூறவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தேசிய தொடக்க நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவை, தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி அமைத்தது. இந்த ஆலோசனை குழுவுக்கு 28 உறுப்பினர்களை தற்போது மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்தியாவில் வெற்றிகரமான தொடக்க நிறுவனங்களை உருவாக்கிய நிறுவனர்கள், புதிய தொழில்களில் முதலீடு செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்த கூடிய நபர்கள், தொடக்க நிறுவனங்களின் சங்கப் பிரதிநிதிகள், தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பை சேர்ந்தவர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.