வர்த்தக டிப்ஸ்
புதிதாக மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவர்கள் கவனிக்க…
மியூச்சுவல் பண்டுகளில் புதிதாக முதலீடு செய்ய இருப்பவர்கள் அதிக ரிஸ்க் இல்லா கடன் பண்டுகள், ஹைபிரிட் பண்டுகள், அசெட் அலோகேஷன் பண்டுகளில் முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். சிறிது அனுபவம் பெற்ற பிறகு, ஈக்விட்டி பண்டுகளில் முதலீட்டை ஆரம்பிக்கலாம். வருமான வரியை சேமிக்க வேண்டும் என்ற நிலையில் யாராக இருந்தாலும் இ.எல்.எஸ்.எஸ். (ஈக்விட்டி லிங்க் சேவிங்க் ஸ்கீம்) பண்டுகளில் முதலீடு செய்யலாம்.
ரிஸ்க் குறைவு, அதிக லாபம் பெற…
சிறுமுதலீட்டாளர்கள் சந்தையின் ஏற்ற, இறக்கங்களை கண்டு பயப்படாமல் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய வேண்டும். கடன் சந்தை சம்பந்தப்பட்ட திட்டங்கள், தங்கம், வெள்ளி மற்றும் ரியல் எஸ்டேட் என அசெட் அலோகெஷன் முறையில் முதலீடு செய்ய வேண்டும். ஈக்விட்டி பண்ட்களில் முதலீடு செய்கையில் லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் என பிரித்து முதலீடு செய்தால் நீண்ட கால ரிஸ்க் குறைவதோடு, நல்ல வருமானத்தையும் பெற முடியும்.
2020ல் லாபம் தந்த பண்ட்கள்
கடந்த ஆண்டில் லார்ஜ்கேப் பண்டுகளின் சென்செக்ஸ் 15 சதம் அதிகரித்தது. மிட் அண்ட் ஸ்மால் இன்டென்ஸ் பண்டுகள் 35 சதம் வரை அதிகரித்தது.