நிலம் வாங்க 50 சதவீதம் மானியம்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செய்திக்குறிப்பு : ஆயிரம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் (ரூ .2.25 லட் சம் முதல் ரூ.3.60 லட்சம் வரை) வழங்கப்படும் . இதற்காக அரசுக்கு ரூ. 23.37 கோடி கோரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது . தற்போது இதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது .
அதேபோல் , நிலமற்ற ஆதி திராவிட மற்றும் பழங்குடி யின மக்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று மானியக்கோரிக் கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ரூ.10 கோடி மதிப்பீடு தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.