நில பட்டா மாறுதலுக்கு புதிய வசதி : அரசு அறிமுகம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவை தொடங்கிவைத்தார்.
வருவாய்த்துறை பொது மக்கள், விவசாயிகள் மற் றும் மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. தற்போது, பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கி வைக் கப்பட்டுள்ளது.
மேலும், பட்டா மாறுதல் அங்கீகரிக் கப்பட்ட பின்னர், பொது மக்கள் பட்டா உத்தரவின் நகல், பட்டா , புலப்படச்சுவடி ஆகியவற்றை எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதனால், பொது மக்கள், பொது சேவை மையங்களுக்கு செல்வதும், வட்ட அலுவலகங்களில் இடைத்தரகர்களால் அவதிப்படுவதும் தவிர்க்கப் படும். அதேபோல், கணினிப் படுத்தப்பட்ட பிளாக் வரைபடங்களை, தனித் தனி நகரப்புலங்களுக்கான வரைபடங்களாக https:// eservices.tn.gov.in 6 GTD இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் இப்புதிய வசதி மூலமாக, பொதுமக்கள் நகர்ப்புற நில வரைபடங்களை இணையவழியில் கட்டண மின்றி பெறலாம். மேலும், இவ்வரைபடம், மனை அங்கீகாரம் மற்றும் வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு அத்தியாவசியமாக விளங்குவதுடன், பொது மக்கள், நகர நிலவரைப்படம் பெரும்பொருட்டு வட்டாட்சியர் அலுவலகம் வருவது தவிர்க்கப்படும்.