7வது சம்பள கமிஷன்.. ஜூலை முதல் மாறும் ஊதிய விகிதம்..!
2021 ஜூலை முதல் மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி (DA), ஹெச்ஆர்ஏ (HRA) பயணப்படி (TA) போன்ற பல்வேறு 7வது ஊதிய கமிஷன் சலுகைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போதுள்ள 17% அகவிலைப்படி 28% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி மறுசீரமைப்பிற்குப் பிறகு, ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பி.எஃப் இருப்பு என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கான மிகவும் பொதுவான ஓய்வூதிய நிதி திரட்டும் கருவிகளில் ஒன்றாக உள்ளது. மத்திய அரசு ஊழியரின் பயணப்படி நேரடியாக அகவிலைப்படியை சார்ந்துள்ளது. ஆக அகவிலைப்படி அதிகரிக்க அதிகரிக்க பயணப்படியும் தானாக அதிகரிக்கும். ஆகையால், அகவிலைப்படி மற்றும் பயணப்படியில் ஒரே சதவீதத்தில் தான் அதிகரிப்பு இருக்கும். ஆக ஜூலை 2021 முதல் பயணப்படி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 2021 முதல் இந்த மாற்றம் செய்யட்டால், சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவர். 58 லட்சத்துற்கும் மேற்பட்ட ஓய்வூதிய தாரர்களுக்கும் இது பயன் தரும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏவில் மாற்றம் செய்யப்படும் போது, ஓய்வூதியதாரர்களுக்கு டிஆரிலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு நேர பணிக்கான அலவன்ஸ் கணக்கிடுவதற்கான விதிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரவு நேர பணிக்கான அலவன்ஸ் கணக்கிடுவதற்கு ஒரு சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை சம்பளம் + DA / 200, என்ற சூத்திரத்தின் அடிப்படையில் செய்யப்படும். இது அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கும் பொருந்தும்.