Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மாதம் ரூ.1500! 30 ஆண்டுகளில் ரூ.50 லட்சம்..!!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மாதம் ரூ.1500!  30 ஆண்டுகளில் ரூ.50 லட்சம்..!!

நம் அனைவருக்குமே லட்சாதிபதி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது மிகவும் எளிதான விஷயம் தான். எப்படி..? வெரி சிம்பிள்.. சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல், நீங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்தால் அந்த ஆசையை நீங்கள் சுலபமாக நிறைவேற்றலாம்.

நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதித் திட்டம் இதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அதாவது ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை எஸ்.ஐ.பி. (SIP- Systematic Investment Plan) முதலீட்டில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் லட்சாதிபதி ஆகிவிடலாம்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

முதலீடு செய்வதற்கு மிகப் பெரிய தொகை வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதம் ரூ.100 தொடங்கி நீங்கள் சேமிக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக சேமிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ரூ.500ஐ தொடர்ச்சியாக நீங்கள் சேமித்து வந்தாலே 20 ஆண்டுகளில் 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதே தொகையை 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு ரூ.17.64 லட்சம் கிடைக்கும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

நீங்கள் உங்களது ஓய்வுக் காலத்தில் ரூ.50 லட்சம் வரையில் சம்பாதிக்க நினைத்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.1,500-ஐ தொடர்ச்சியாகச் சேமிக்க வேண்டும். 30 ஆண்டுகளில் இந்த இலக்கை நீங்கள் அடைந்துவிட முடியும். உங்களுக்கு இப்போது 30 வயது என்று வைத்துக் கொண்டால் உங்களது 60ஆவது வயதில் உங்கள் கையில் ரூ.53 லட்சம் இருக்கும். ஓய்வுக் காலத்தில் இந்தத் தொகை உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

வங்கிகளில் செயல்பாட்டில் இருக்கும் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டங்களை விட SIP முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிறது. தற்போதைய சூழலில் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் 5 முதல் 6 சதவீத ரிட்டன் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், SIP முதலீட்டில் 12 சதவீதம் வரையில் ரிட்டன் கிடைக்கிறது.

முக்கியமான விஷயம் என்னவென்றால் SIP முதலீடு என்பது பங்குச் சந்தை சார்ந்தது. எனவே சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து இதில் லாபம் கிடைக்கும். அளவுக்கு அதிகமாகவும் கிடைக்கலாம்; குறைவாகவும் கிடைக்கலாம். ஆனால் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் நிலையான ரிட்டன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.