திருச்சி மக்களுக்கு 10,000 கோடி கடன் தர தயார்… மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு..!
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 2021–22ஆம் ஆண்டிற்கான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட அனைத்து வங்கி ஒருங்கிணைப்பு குழு சார்பில் வழங்கப்பட்ட திட்ட அறிக்கையை வெளியிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு கூறுகையில்,
திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கியுடன் இணைந்து 2021–22 ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இதில் விவசாயத் துறைக்கு ரூ.5,619 கோடி, சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு ரூ.1,686 கோடி, வீட்டுக் கடனுக்கு ரூ.1,335 கோடி, கல்வி கடனுக்கு ரூ.490 கோடி, புதுப்பிக்ககூடிய ஆற்றல் சக்தி துறைக்காக ரூ.96.63 கோடி, சமூக உள்கட்டமைப்புக்கு ரூ.170.14 கோடி மற்றும் இதர காரியங்களுக்காக ரூ.697.55 கோடி என நடப்பாண்டில் மொத்தம் 10 ஆயிரத்து 90 கோடியே 85 லட்சம் ரூபாயை பொதுமக்களுக்கு கடன் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.