மனிதர்களை எளிய முறையில் கையாளும் முறைகள்…
‘‘மனிதர்களுடன் சரியான தொடர்பு இல்லாவிட்டால், வாழ்க்கையில் நாம் என்னதான் வெற்றியின் உச்சத்தைத் தொட்டாலுமே ஏதோ ஒரு வெற்றிடத்தில் வாழ்வது போன்ற மனநிலையையே கொண்டிருப்பார்கள் என்பதே நிஜம். எனவே மனிதர்களைத் திறம்படக் கையாள்வது முக்கியமாகிறது.
யாருக்கு லாபம்?
மேலோட்டமாகப் பார்த்தால், நான், நான் என்ற குணாதிசயம் கொண்டு யாருக்காகவும் எதற்காகவும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளமல் வாழ்கிற மனிதர்களே பெரும் வெற்றியையும் பெரிய பதவியையும் அடைவதைப் போன்ற தோற்றம் நமக்குக் கிடைக்கும். ஆனால், பணியிடம், வீடு மற்றும் வாழ்க்கை என்ற மூன்றிலும் வெற்றிகரமாக வாழ்கிற மனிதர்கள் தலைசிறந்த மனிதர்களைக் கையாளும் குணத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதே நிஜம்.
காது கொடுத்துக் கேளுங்கள்…
உங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் எனில், அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். “மனிதர்கள் அடுத்தவர்களைவிட தங்களைப் பற்றித்தான் அதிகமாக கவலைப் படுவார்கள். அதே போல், அவர்களைப் பற்றித்தான் பேச முயல்வார்கள். எனவேதான், மனிதர்களைப் பேச சொல்லிக் கேட்பதே வியாபாரம், வாழ்க்கை உள்ளிட்ட அனைத்து மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங் களிலும் அவர்களைப் புரிந்து கொள்வதற்கு சிறந்த வழி முறையாகும்.
உலகில் பெரும்பாலான மனிதர்கள் தனிமையில்தான் இருக்கின்றனர். எனவே, அவர்கள் பேசுவதை நீங்கள் கேட்டால் அவர்களுடன் நீங்கள் உறவை ஏற்படுத்திக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் தனியாக இருப்ப தாக உணர்ந்துகொண்டிருக் கும் வேளையில் அவர்கள் பேசுவதைக் கேட்பதே அவர் களுடன் இணைந்து செயல்பட முதல்படியாக இருக்கும். அவர்கள் பேசும்போது காதுகளால் கேட்பதைவிட கண்களால் கேளுங்கள். முகபாவனைகள், உடல் அசைவுகள் மற்றும் தோரணைகள் போன்றவை வார்த்தைகள் சொல்லாத பல்வேறு விஷயங்களைத் தெளிவுபடுத்துவதாக இருக்கும்.
பிடிக்காதவர்களுடன் பேசுங்கள்…
நம்மைப் பிடிக்காதவர்களைப் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏன் அவருக்கு நம்மைப் பிடிக்க வில்லை, அடிப்படைக் காரணங்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கொஞ்சம் நேரமும் வாய்ப்பிருந்தால் கொஞ்சம் பணமும் செலவிட்டு அது குறித்து நாம் தெரிந்துகொண்டு அதற்கேற்ப நாம் நடந்துகொள்ளலாம். ஒரு டின்னரிலோ, காபி குடிக்கும் நேரத்திலோ நம்மால் ஒருவர் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. என்றாலும் ஓரளவுக்கு நமக்கு அவரைப் பற்றி புரியும். இது போன்ற சந்திப்புகள் நிகழும்போது நம்மைப் பற்றி பெரிய அளவில் பேசாமல் அவர்களைப் பற்றி அவர்களே பேசுவதற்கான வாய்ப்புகளையே நிலைக்கச் செய்ய வேண்டும்.
உங்களைப் புரிந்துகொள்ளுங்கள்…
“மனித உறவுகளைப் பேணி வளர்க்க நினைக்கும் ஒருவர் முதலில் தன்னைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், மற்ற மனிதர்கள் பற்றிப் புரிந்து கொள்ளவும் அவருடைய நம்பிக்கையைப் பெற்று தனக்கு இசைவாகச் செயல்பட வைக்கவும் வேண்டுமெனில், முதலில் நாம் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றிய தெளிவு நமக்கு இருக்க வேண்டும். தன்னைப் போன்ற நிலைப்பாடுகளையே மற்றவர்களும் எடுப்பார்கள் என்பதை மனதில் கொள்ளவே இதை ஒருவர் முதலில் செய்ய வேண்டும். நம்மைப் பிடிக்காதவர்களுக்கும் நம்மைப் பிடிக்க வைக்க முடியும் என்று நாம் முழுமையாக நம்புவதாகும். இப்படி சுயநிர்ணயம் (self determination) செய்துகொள்வது என்பது நம்முடைய முயற்சிகளுக்கு கொஞ்சம் ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
அறிவுரைகளை அள்ளி வீசாதீர்கள்…
அறிவுரைகளை வழங்குவது என்பது வேஸ்ட்டான விஷயம் என்று நாம் நினைக்கிறோம். அறிவுரையை வழங்குவது தவறு. ஏனென்றல், உலகில் இலவசமாக அளவின்றி கிடைக்கும் ஒரு விஷயம் அது என்று நாம் நினைக்கிறோம். இதன் மற்றொரு பக்கத்தைப் பார்த்தால், இதை எப்படி நமக்கு சாதகமாக உபயோகித்துக்கொள்வது என்பது நமக்குப் புரியும். எனவே, மற்றவர்களை அவர்களது பிரச்னைகளை சொல்லவிடுங்கள். அப்படிச் சொன்ன பின்னால் அறிவுரைகளை அள்ளி வீசாதீர்கள்.