மாட்டு சாணத்தில் தயாராகும் புதிய பெயிண்ட்..!
கைப்பை, பைகள், பொம்மைகள், முகக்கவசம் என மாட்டுச் சாணத்தில் பல்வேறு பொருட்களை அறிமுகம் செய்தது மத்திய அரசு. தற்போது மாட்டு சாணத்தில் பெயிண்ட் தயாரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது சுட்டுரையில், “காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் மூலம் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட ‘வேதிக் பெயிண்ட்’ விரைவில் தொடங்கப்படும்.
‘வேதிக் பெயிண்ட்’ விற்பனை கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும். சூழலியல் சீர்கேடு இல்லாத வகையிலும், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும். இதனால் கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.55,000 கூடுதல் வருமானம் கிடைக்கும் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.