ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபம் பார்க்க முத்தான யோசனைகள்
நீங்கள் வாங்க விரும்பும் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, ஆண்டு வருவாய், நிகர லாபம் ஆகியவற்றை ஆய்வு செய்யுங்கள். பங்குசந்தையில் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் கோடிக்கான வருவாய் அல்லது லாபம் தரும் நிறுவன பங்கை தேர்வு செய்யலாம்.
அதிக சொத்துக்கள் உள்ள நிறுவனம் மற்றும் கடன் இல்லாத, நடைமுறை மூலதனம் உள்ள நிறுவனங்களின் பங்கை வாங்கலாம்.
வாங்க நினைக்கும் பங்கு நிறுவனத்தின் வளர்ச்சியை ஆராய்ந்து, அதன் லாப விகிதம் குறைந்தால் அதற்கான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் லாப அளவு குறையும் போது சந்தையில் பங்கு விலைகளில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய வேண்டும்.
தொடர்ச்சியான டிவிடென்ட் தரும் நிறுவனங்களின் பங்கை வாங்கலாம். அந்த பங்கின் விலை அதிகமாக இருந்தாலும், தொடர்ச்சியான டிவிடெண்ட் பங்கின் விலையை நஷ்டம் தருதா என்பதையும் ஆராய வேண்டும்.
வாங்க விரும்பும் பங்கின் விலை அதன் புத்தக மதிப்பின் (பேஸ் வேல்யூ) இருமடங்குக்கு குறைவாக பார்த்து வாங்கலாம்.
கடந்த 10 ஆண்டு காலத்தில் வாங்க விரும்பும் நிறுவன பங்கின் விலையும், அதன் லாபமும் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து வாங்க வேண்டும்.