ரூ.10,000த்திற்கு மேல் பணம் எடுத்தால் ஓடிபி..!
வங்கிக் கணக்கிலிருந்து ஏடிஎம் வாயிலாக பணம் எடுப்பதில் உள்ள தில்லுமுல்லுகளை களைய முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடைமுறைகளை எஸ்பிஐ வங்கி பின்பற்றி வருகிறது.
தற்போது புதிதாக அறிமுகப் படுத்தியுள்ள இந்த நடைமுறையானது, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ரூ.10,000த்திற்கு மேல் பணம் எடுக்கும் போது ஓடிபி எண் உங்களது மொபைல் எண்ணுக்கு வரும். அந்த எண்ணை பதிவிட்டால் மட்டுமே பணம் வரும். நீங்கள் ரூ.10,000த்திற்கு மேல் பணம் எடுக்கச் செல்லும் போது உங்கள் கையில் மொபைல் போன் இல்லையென்றால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து உங்களால் ஏடிஎம் வாயிலாக பணம் எடுக்க முடியாது. நீங்கள் வங்கியில் கணக்கு தொடங்கும் போது ஒரு செல் எண் கொடுத்திருப்பீர்கள். அதே எண்ணை தான் உபயோகிக்கிறீர்கள் என்றால் பிரச்சனை இல்லை.
புதிதாக ஒரு எண்ணை பயன்படுத்தி னால் மறக்காமல் உங்கள் வங்கிக் கணக்கில் அந்த எண்ணை இணைத்துக் கொள்ளவும். இல்லையெனில் நீங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையிலான நேரங்களில் ரூ.10,000த்திற்கு மேல் பணம் எடுக்க முடியாது.
உங்கள் ஏடிஎம் கார்டு தொலைந்து வேறு எவர் கையில் சிக்கினாலும் அவரால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது. இந்த வாய்ப்பு, காணாமல் போன கார்டு குறித்து உங்களை அலர்ட் செய்யவும் உதவும்.