ஸ்ரீரங்கம் அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு
செல்வமகள் திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்பு, வங்கி மற்றும் ஆதார் பதிவு உட்பட பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஸ்ரீரங்கம் அஞ்சல்துறை கோட்டத்தில் பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜன், “கடந்த ஆண்டில் வங்கிகளை விட அஞ்சல்துறை வங்கிகளில் 22 லட்சம் புது கணக்குகள் தொடங்கப்பட்டன.
அஞ்சல்துறை செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அஞ்சல்துறையில் இளைஞர்களை விட மூத்தவர்கள் அதிக சாதனை புரிகின்றனர். சாதிக்கும் ஆற்றல் கொண்ட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்கள் சிறந்த வளர்ச்சியை பெறுகிறது.
சிறந்த தொழில்நுட்ப வசதி கொண்ட அஞ்சல் துறையின் சிறப்பான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனைத்து ஊழியர்களுக்கும் பங்கு உண்டு” என்றார்