வர்த்தக டிப்ஸ்
பங்குகளை வாங்க சரியான முறை
பங்குசந்தையில் புதிதாக ஈடுபடும் சிலர் முதலீட்டு ஆலோசகர்கள், மீடியாக்கள், நண்பர்கள் என சிலர் சொல்வதை கேட்டு ஒரே முறையில் மொத்த பணத்தையும் ஒரே பங்கில் முதலீடு செய்கின்றனர். இது தவறான முறையாக உள்ளது. பங்கு மேலே ஏறுமபோது குறைந்தது 3 தவணயை£க முதலீடு செய்யலாம். சிலர் பங்கு விலை இறங்குகையில் வாங்குவார்கள். இதை தவிர்த்து பங்கு மேலேறும்போது வாங்குவதே சிறந்த முறையாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8..!
2018-&19-ஆம் ஆண்டுக்கான ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாகும்.
குறைவான ரிஸ்க் தரும் முதலீடு
குறைவான ரிஸ்க் தரும் இடிஎப், இன்டெக்ஸ் பண்டுகளையே சிறு முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். இவ்வகை பண்டுகளில் சந்தை செயல்படும் நேரங்களில் நமக்கு தேவையான சமயம் முதலீடு செய்யலாம். அல்லது வெளியேறவும் முடியும். இதற்கான தரகு கட்டணம் மிகக் குறைவு. அதிகபட்சமாக 15 சதவிகிதம் வரை இவைகளில் முதலீடு இருக்கலாம்.
28.90 கோடி நுகர்வோர்..!
கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் சமையல எரியாவு நுகர்வோரின் மொத்த எண்ணிக்கை 28.90 கோடியாகும். மேலும் 70.75 லட்சம் நுகர்வோர் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். தற்போது, தேசிய எல்பிஜி விநியோக அளவு 99.5 சதவீதமாக உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கடன் வட்டி குறைய என்ன வழி?
வீட்டுக்கடனுக்கான வட்டி குறைப்பு குறித்து ரிசர்வ் வங்கி அறிவிக்கும் போது, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டி குறைய, வங்கியில் ஆர்.எல்.எல்.ஆர். எனும் முறைக்கு மாற்ற விண்ணப்பித்தால் மட்டுமே வட்டி குறையும்.
எனவே மக்கள் தங்கள் வீட்டுக் கடனின் வட்டி விகிதத்தை சந்தையோடு ஒப்பிட்டு பார்த்து ரீசெட் செய்து கொள்ள வேண்டும். ஹெச்டிஎப்சி, எல்ஐசி போன்ற ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்களில் ஆர்.எல்.எல்.ஆர். முறையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தருவதில்லை.
என்.ஆர்.ஐ.க்கள் ஹோம் லோன் பெற முடியுமா…
இந்தியாவில் வசித்து வெளிநாட்டில் தங்கி வேலை செய்பவர்களையே என்.ஆர்.ஐ.க்கள் என்பர். தனிநபர் லோன் போன்ற கடன்களை இங்குள்ள வங்கிகள் என்ஆர்ஐக்களுக்கு தருவதில்லை. ஆனால் வீட்டுக்கடன்களை அவர்கள் நாட்டிற்கு வராமலேயே உறவினர்கள், நண்பர்களுக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்து வாங்கிக் கொள்ள முடியும். வீட்டுக்கடனை இங்குள்ள வங்கிகள் மற்றும் பெரும் நிதி நிறுவனங்களும் தருகிறது.
குளோஸ் எண்டட் பண்ட் அபாயம்..!
ஒப்பன் என்டட் பண்டுகளில் முதலீடு செய்யும் போது பணம் தேவைப்படும்பட்சத்தில் அவற்றை எந்த காலத்திலும் வேறு இடத்தில் மாற்றி முதலீடு செய்யலாம். ஆனால் குளோஸ் எண்டட் பண்டுகளில் முதலீடு செய்யும் போது, குறைந்தது 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு வெளியில் எடுக்க முடியாது.
மேலும் இவ்வகை பண்டில் முதலீடு செய்யும் போது லாபம் தராத பண்டுகளில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. குளோஸ் எண்டட் பண்டுகளின் கடந்த கால செயல்பாடுகளை கவனிக்கும் போது ஒரு சில நிறுவனங்களை தவிர மற்றவை சிறந்த லாபம் தரவில்லை. எனவே மக்கள் ஓப்பன் எண்டட் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதே சிறந்தது.
நீண்டகால முதலீட்டில் லாபம் பெற வைக்கும் பண்ட்:
நீண்ட கால முதலீட்டில் பணவீக்க விகிதத்தை தாண்டி வருமானம் பெற இ.டி.எப். பண்டுகளில் முதலீடு செய்வது அவசியமானது. இந்த வகை பண்டுகளை வர்த்தக நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம். இவ்வகை பண்டுகள் புதிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றது.
ஒரு இ.டி.எப். பண்டில் முதலீடு செய்வதன் மூலம் பல பங்குகளின் பலனை அடையலாம். நாட்டின் 50 முன்னணி நிறுவனங்களின் பங்குகள் அடங்கிய நிப்டி 50 இ.டி.எப். திட்டத்தில், முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை தருகிறது. உங்கள் மொத்த முதலீடுகளில் குறிப்பிட்ட சதவீதமானது இ.டி.எப்.பில் முதலீடு செய்து லாபம் பெறலாம்.