இதற்கெல்லாம் வரி செலுத்தத் தேவையில்லை..!
– 5 வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தவர்கள், பிராவிடன்ட் பண்டிலிருந்து பணம் எடுத்தால் வரி செலுத்தத் தேவையில்லை.
-கிராஜுவிட்டி தொகை ரூ.20 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை. அதேபோல ரூ.3 லட்சம் வரை விடுப்புக்கு ஈடாக கிடைக்கும் பணத்துக்கும் வரி செலுத்தத் தேவையில்லை.
-ஆயுள் காப்பீட்டு பாலிசி முடியும் போது பெறும் தொகை அல்லது அதற்கு முன்னர் திருப்பி பெறும் பணத்துக்கு வரி இல்லை. அதே போல் சுகன்ய சம்ருதி யோஜனா முதலீடு மூலம் கிடைக்கும் பணத்துக்கும் வரி இல்லை.
– முதிர்ச்சி அடைந்த அல்லது இன்னமும் முதிர்ச்சி அடையாத தேசிய ஓய்வூதிய நிதியிலிருந்து எடுக்கப்படும் பணத்தில் 40 சதவீதத்திற்கு இனி வரி இல்லை.
-ஓய்வூதிய நிதியிலிருந்து அவசர தேவைக்கு பகுதியாக திருப்பி பெறும் பணத்துக்கு 25% வரி இல்லை.
-தபால் சேமிப்பு கணக்கு மூலம் கிடைக்கும் வட்டி ரூ.3,500 வரை வரி இல்லை.