வீட்டிற்கு மாத வாடகை ரூ.2 கோடி மட்டுமே..!
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் மிகப்பெரிய பணக் காரர்களில் ஒருவரான ஆதார் பூனவல்லா உலகின் மிகவும் காஸ்ட்லியான குடியிருப்பு பகுதியாக விளங்கும் லண்டன் மேஃபேர் பகுதியில் இருக்கும் பிரம்மாண்ட வீட்டிற்குக் குடியேறியுள்ளார்.
தன் மாத வாடகை என்ன தெரியுமா..? அதிகமில்லை ஜென்டில்மேன்.. ஐஸ்ட் ரூ.2 கோடி மட்டுமே..! சுமார் 25,000 சதுரடி கொண்ட இந்த பிரம்மாண்ட மாளிகை போன்ற வீடு போலாந்து நாட்டின் பில்லியனரான Dominika Kulczyk என்பவர் உடையதாம்.! ஆதார் பூனவல்லா தற்போது குடியேறியுள்ள மேஃபேர் பகுதியில் உலகின் பல முன்னணி தொழிலதிபர்களும், பில்லியனர்களும் உள்ளனர். குறிப்பாக போன்ஸ் 4u நிறுவனத்தின் தலைவர் ஜான் காட்வெல் போன்ற பல அரசியல் மற்றும் பணக்காரர்களின் பிள்ளைகளும் இப்பகுதியில் வசிக்கின்றனர்.