யாருக்கு எவ்வளவு சதவீதம் கடன்?
கொரோனா தொற்று பரவலுக்கு பின், சில்லரை கடன் பிரிவில் ஏற்பட்டு வரும் பின்னடைவு காரணமாக, கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில், 18-33 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் கடன் வழங்குவது, 8 சதவீதமாக மட்டுமே உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 30 வயதுக்கு மேற்பட்ட, புதிதாகக் கடன் வாங்கும் நபர்கள், தனிநபர் கடன் அல்லது நுகர்பொருள் கடன்களில் அதிக ஆர்வம் காட்டு கிறார்கள். கடன் வாங்குபவர்களில், பெண்களின் பங்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
வாகனக் கடனை பொறுத்தவரை, கடன் பெறுவோரின் பங்களிப்பு, 15 சதவீதமாகவும், வீட்டுக் கடன் பெறுவோர் 31 சதவீதமாகவும், தனிநபர்கடன் 22 சதவீதமாகவும், நுகர்பொருள் கடன் 25 சதவீதமாகவும் இருக்கிறது.