Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அடல் ஓய்வூதிய திட்டத்தில் தமிழகத்திற்கு ஐந்தாவது இடம்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அடல் ஓய்வூதிய திட்டத்தில் தமிழகத்திற்கு ஐந்தாவது இடம்..!

அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 2021-&22 நிதியாண்டில் 28 லட்சத்திற்கும் அதிகமான புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டு மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 2021 ஆகஸ்ட் 25 நிலவரப்படி 3.30 கோடியை கடந்துள்ளது என்றும், தமிழ்நாட்டை பொறுத்தவரை, இது வரை மொத்தம் 24,55,438 பேர் அடல் ஓய்வூதிய திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இதில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகியவை முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடங்களிலும் உள்ளன. தமிழகம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

2021 ஆகஸ்ட் 25 வரையிலான மொத்த உறுப்பினர்களில், 78 சதவீதம் பேர் ரூ.1,000 ஒய்வூதிய திட்டத்தையும், 14 சதவீதம் பேர் ரூ.5,000 ஒய்வூதிய திட்டத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். மொத்த உறுப்பினர்களில் 44 சதவீதம் பெண்களாக உள்ளனர். சுமார் 44 சதவீதம் பேர் 18-&25 வயதுடைய இளம் வயதினர் ஆவர்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.