‘அனைவரின் முயற்சி: அனைவரின் கூட்டு” என்ற இணைய கருத்தரங்கில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் & உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சர் ப்யூஸ் கோயல் பேசியதாவது:
நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை, திறன் மேம்பாட்டின் மீது கவனம் செலுத்துகிறது. கல்வியை தவிர, இரட்டை பட்டப்படிப்பு திட்டங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனான கூட்டு, மாணவர் பரிமாற்ற திட்டம் மற்றும் சுதந்திர கலைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது.
புதிய கல்விக் கொள்கைக்காக ஜனவரி 2015 முதல் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் சுமார் 700 மாவட்டங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆலோசனைகள் இவற்றில் அடங்கும். புதிய கல்விக் கொள்கையை யாரும் விமர்சிக்கவில்லை, அனைவரின் முயற்சியின் விளைவாக உருவாக்கப்பட்டது.
மற்ற நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையின் போது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தி உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும் அரசு பணியாற்றி வருகிறது. புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டணத்தை குறைப்பதை பல்கலைக்கழகங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.