Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஜீரோ முதலீடு அதிக லாபம்… டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம் பெற வைக்கும் புதிய தொடர் 3

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஜீரோ முதலீடு அதிக லாபம்… டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம் பெற வைக்கும் புதிய தொடர் 3

கூகுள் மை பிசினசில் கணக்கு தொடங்குவது எப்படி?

இணையத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நம் தொழில் பற்றிய விவரங்களை பதிவிட வேண்டும். அவ்வாறு பதிவிடுவதன் மூலம் நம் தொழில் மற்றும் சேவை பற்றிய விவரங்கள் இணையத்தில் பரவியிருக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் நம் தொழில் பற்றிய செய்திகளை தேடும் போது அவருக்கு இலகுவாக அந்த விவரங்கள் கிடைக்கும். அவ்வாறு நம் தொழில் அல்லது சேவை பற்றிய விவரங்களை பதிவு செய்யும் ஒரு கருவி தான் கூகுள் மை பிசினஸ்.

கூகுள் பிசினஸ் கருவியானது ஒரு இலவச கருவியாகும், இதன் மூலம் நம்முடைய தொழிலை இணையத்திற்கு கொண்டு செல்லலாம். சொந்தமாக இணையதளம் இல்லாதவர்களும் இதன் மூலம் தங்களது தொழிலை இணையத்திற்கு கொண்டு சென்று வருவாயை அதிகப்படுத்தலாம். இந்த கூகுள் மை பிசினஸ் தொடங்குவதற்கு நமக்கு தேவையானது ஒன்றே ஒன்று தான் அது ஜிமெயில் ஐடி ஆகும். யாரெல்லாம் ஜிமெயில் ஐடி வைத்துள்ளார்களோ, அவர்கள் அனைவருமே கூகுள் மை பிசினஸ் சேவையை இலவசமாக பெற்று பயன்பெறலாம்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

ஒரு நிறுவனம் கூகுள் மை பிசினசில் பதிவு செய்து இருந்தால், உடனே அந்த நிறுவனத்தைப் பற்றிய விவரங்களை கூகுள் வழங்கும். உதாரணமாக Ntrichy என்று கூகுளில் தேடினால், வலது பக்கம் Ntrichy தொடர்பான விவரங்கள், வலைத்தள முகவரி, கூகுள் மேப்பில் அலுவலக முகவரி, தொடர்பு எண், புகைப்படங்கள், வேலைநேரம் என பல தகவல்கள் இருப்பதை பார்க்க முடியும்.

google.com/business என்ற வலைத்தள முகவரியில் உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை கொண்டு கூகுள் மை பிசினஸ் கணக்கை தொடங்கலாம். முதல் பக்கத்தில் உங்கள் தொழிலின் பெயரை கொடுத்து அடுத்த பக்கமான Create Profile பக்கத்திற்கு செல்லவும். அங்கு தொழிலின் பெயர், தொழிலின் வகை ஆகியவற்றை பதிவிடவும். அடுத்த பக்கத்தில் அலுவலகம் அமைந்துள்ள இடத்தை பதிவு செய்ய வேண்டுமென்றால் பதிவு செய்து கொள்ளலாம்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

அடுத்த பக்கத்தில் எந்தெந்த இடங்களில் உங்கள் சேவை அல்லது தொழிலை செய்கிறீர்களோ அந்த இடங்களை குறிப்பிடவும். அடுத்த பக்கத்தில் உங்கள் மொபைல் எண், இணைய முகவரியை பதிவிடவும். அடுத்த பக்கத்தில் உங்களது அலுவலகம் அமைந்துள்ள முழு முகவரியை பதிவிடவும். அடுத்தடுத்த பக்கங்களில் வேலை நேரம், படங்கள் போன்றவைகளை பதிவு செய்து கொள்ளலாம்.

Continue பட்டனை அழுத்தி உங்களது கூகுள் மை பிசினஸ் கணக்கை தொடங்கிவிடலாம். இதற்கு பிறகும் உங்களுக்கு தேவையான தகவல்களை சேர்த்துக் கொள்ளலாம். கூகுள் மை பிசினசில் கணக்கை உருவாக்குவதன் மூலம் கூகுள் மேப்ஸ்-ல் உங்கள் தொழிலின் அலுவலக இடம் தானாகவே பதிவாகிவிடும்.
உங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல கூகுள் மை பிசினஸ் ஒரு அருமையான தேர்வு ஆகும். இதன் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வது இலகுவாகிவிடும் . டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய நினைப்பவர்கள் கூகுள் மை பிசினசில் பதிவு செய்தால் நல்ல பயன் கிடைக்கும்.

அடுத்த இதழில் இ-மெயில் மார்க்கெட்டிங் பற்றி விரிவாக பார்ப்போம்.

– தேவா கேசவன்

முந்தைய தொடரை வாசிக்க…

ஜீரோ முதலீடு அதிக லாபம்.. டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர் – 2

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.