சிறு சேமிப்புத் திட்டம்: எதற்கு எவ்வளவு வட்டி..!
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் மாற்றப்பட்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும். அந்த வகையில் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிற்கு 4 சதமும், தேசிய சேமிப்பு ரெகரிங் டெபாசிட் கணக்கு(RD)–5 ஆண்டிற்கு 5.8%மும், தேசிய சேமிப்பு டைம் டெபாசிட் கணக்கிற்கு(TD) ஓராண்டு முதல் 3 ஆண்டுக்கு 5.5%மும், 5 ஆண்டிற்கு 6.7%மும், தேசிய சேமிப்பு மாத வருமானத் திட்ட(MIS) 6.6%மும், சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கு 7.4%மும், பொது வருங்கால வைப்புநிதிக்கு(PPF) 7.1%மும், சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு 7.6%மும், தேசிய சேமிப்பு சான்றிதழ், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 6.9%மும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.