லாக்கர் வேண்டாம்… டெபாசிட் தருகிறது வருமானம்..!
தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி. உங்களிடம் தங்க நாணயங்கள், நகைகள் இருந்தால் அவற்றை வங்கியில் டெபாசிட் செய்து அதிகப்படியான வட்டி விகிதத்தைப் பெறலாம். எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
குறைந்தபட்சம் 10 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. எவ்வளவு அதிகமாக வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். 1 முதல் 3 ஆண்டுகள், 5 முதல் 7 ஆண்டுகள், 12 முதல் 15 ஆண்டுகள் என வெவ்வேறு வரம்புகளில் டெபாசிட் செய்யலாம். ஒரு வருட டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 0.50 சதவீத வட்டியும், 1 முதல் 2 ஆண்டுகளுக்கு 0.60 சதவீத வட்டியும், 2 முதல் 3 ஆண்டுகளுக்கு 0.75 சதவீத வட்டியும் கிடைக்கும். 5 முதல் 7 ஆண்டுகளுக்கான வட்டி 2.25 சதவீதம். அதேபோல, 12 முதல் 15 ஆண்டுகளுக்கான வட்டி 2.50 சதவீதமாகும். வீட்டிலிருந்தே சம்பாதிக்க இதுவொரு நல்ல வாய்ப்பாகும்.