வீட்டுமுறை உணவு வேண்டுவோருக்கு தேவகி’ஸ் கிச்சன்
திருச்சி அலுவலகம் செல்பவர்கள், விடுதியில் தங்கி படிப்பவர்கள் மற்றும் பணிபுரிவோர் ரெஸ்டாரண்ட் மற்றும் பிற ஹோட்டல்களை நம்பியே தங்களது உணவு தேவையினை பூர்த்தி செய்து கொள்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வீட்டுமுறை சமையல் உணவு கிடைக்காமல் தவிப்பது உண்டு. அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய உதயமாகி யுள்ளது ‘தேவகிஸ் கிச்சன்’.
திருச்சி, கருமண்டபம் பகுதியில் தொடங்கி நடத்தப்பட்டு வரும் இந்த ‘தேவகிஸ் கிச்சன்’ உணவு கூடத்தில் வீட்டு முறைப்படி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சைவ உணவுகள் ஆர்டரின் பேரில் நாட்கள், வார மற்றும் மாத அடிப்படையில் செய்து தரப்படுகிறது.
தேவகி’ஸ் கிச்சனில் கிடைக்கும் உணவுகளில் சிறப்பம்சம் என்னவெனில் வீட்டிலே தயாரித்த மசாலாப் பொருள்கள், சுத்தமான எண்ணெய், மற்றும் தரமான மளிகைப் பொருட்களை கொண்டு முற்றிலும் வீட்டு முறைப்படி சுவையூட்டிகள் எதுவும் சேர்க்கப்படாமல் சுவையாகவும் உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு காலை மற்றும் இரவு நேர டிபன் உணவுகளாக இட்லி, தோசை, இடியாப்பம், அடை, சேமியா கிச்சடி, பொங்கல், பூரி, ஆப்பம், புட்டு கேழ்வரகு உப்புமா, மினி இட்லி, சப்பாத்தி ஆகியவை கிடைக்கிறது.
மேலும் மதிய உணவாக சாதம், சாம்பார், வத்தக் குழம்பு, மோர் குழம்பு, உருண்டை குழம்பு, ரசம், புளிக்குழம்பு, வெந்தய குழம்பு, மோர் குழம்பு, கூட்டு, பொறியல், அப்பளம், ஊறுகாய், வடை, பாயாசம் மற்றும் வெரைட்டி ரைஸ் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி சுண்டல், வடை, பஜ்ஜி, அப்பம், பணியாரம், கொழுக்கட்டை ஆகிய பலகாரங்களும் கிடைக்கின்றது.
வீட்டு முறைப்படி சமையலை விரும்புவோர் தேவகி’ஸ் கிச்சனை 99524 93046, 94861 03525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சுத்தமான சுவையான உணவை உண்டு மகிழலாம். தேவகி’ஸ் கிச்சனில் சமையல் வேலை தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளோர் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.