விபத்து காப்பீட்டிற்கு தள்ளுபடி..!
கொரோனா காரணமாக அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனம், மற்றும் சில காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிகள் புதுப்பிப்பதில் 10-1% தள்ளுபடிகள் அளித்துள்ளன. இது மூன்றாம் தரப்பு பாலிசிகளுக்கும் சில தள்ளுபடிகளை வழங்கியுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதே போல் பாரதி ஆக்ஸா நிறுவனம் (Bharti AXA General Insurance Company Ltd) தங்களுடன் நீண்டகாலமாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு சில தள்ளுபடியை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
காப்பீட்டாளர்கள் எந்த அளவுக்கு தள்ளுபடியை வழங்குவார்கள் என்பது அவர்களின் தயாரிப்புகளை பொறுத்தது. எனினும் பொதுவாக வாகன பிரீமியங்கள் 10% குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.