ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும்..! பிரபல வங்கியின் கட்டுப்பாடு
வங்கித் துறையில் நீடிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வங்கிகள் சீரமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கடுமையாகச் செயல்படுத்தி நலிந்துவரும் வங்கிகளை மேம்படுத்தவும், தொடர்ந்து செயல்படவும் தேவையான உதவிகளை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது.
இந்நிலையில் சோலாப்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லஷ்மி கூட்டுறவு வங்கி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் இவ்வங்கி தற்போது ரிசர்வ் வங்கியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இவ்வங்கியை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் வங்கி சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூ.1000 மட்டுமே எடுக்கமுடியும் என அறிவித்துள்ளது.
மேலும் சோலாப்பூர் லஷ்மி கூட்டுறவு வங்கி இனி வாடிக்கையாளர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ கடன் வழங்கவும், வழங்கிய கடனை ரத்து செய்யவும் ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.
அதேபோல, வாடிக்கையாளர்களுக்கான வங்கிச் சேவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.