சென்னை ஐ.டி.நிறுவனத்தின் சர்ப்ரைஸ் கிப்ட்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டபிரபல மென்பொருள் நிறுவனம் ‘கிஸ்ஃப்ளோ’. அதன் 10 ஆம் ஆண்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், நிறுவன ஊழியர்களான மூத்த தயாரிப்பு அலுவலர் தினேஷ் வரதராஜன், தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் கௌசகிராம் கிருஷ்ணசாயி, பொறியியல் பிரிவு இயக்குனர்கள் விவேக் மதுரை, ஆதி ராமநாதன் மற்றும் துணை தலைவர் பிரசன்னா ராஜேந்திரன் ஆகிய ஐந்து பேருக்கும் நிறுவனர் சுரேஷ் சம்மந்தம் 5 பி.எம்.டபிள்யூ. கார்களை பரிசளித்தார்.
நிறுவனம் தொடக்கம் முதலே இவர்கள் என்னுடன் இருக்கின்றனர். என்னுடைய கடின காலத்திலும் இருந்துள்ளார்கள். அவர்களின்றி நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. விலையுயர்ந்த காரைவிட மிகப்பெரிய பரிசு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்களது உழைப்புக்கான மிகச்சிறிய அங்கீகாரம் இது’ என்று சுரேஷ் தெரிவித்துள்ளார்.
விழாவில் சர்ப்ரைஸாக ஊழியர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. ‘எங்களால் இதனை நம்ப முடியவில்லை. கனவு நனவான நேரம்’ என்று கார் பரிசு பெற்ற ஊழியர்கள் கூறுகின்றனர்.
3 ஆண்டுகளுக்கு முந்தைய பி.எம்.டபிள்யூ. சீரிஸ் 6 –ஐ நிறுவனர் சுரேஷ், பயன்படுத்தி வரும் நிலையில் ஊழியர்களுக்கு பி.எம்.டபிள்யூ. சீரிஸ் 5 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.