விடுமுறை நாளிலும் எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை:
கடந்த 4ந்-தேதி முதல் எல்.ஐ.சி. பங்கு விற்பனை தொடங்கி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எல்.ஐ.சி., பங்குகளை வாங்குவதற்காக சனிக்கிழமை மற்றும் ஞாயிறு அன்றும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது நாளான நேற்றைய நிலவரப்படி, 100 சதவீதம் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. ஐபிஓ பங்கு விற்பனை வருகின்ற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.