ஜீலை முதல் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கி சேவை:
நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் வருகின்ற ஜீலை மாதம் முதல் டிஜிட்டல் வங்கி சேவை தொடங்கப்பட உள்ளது.
டிஜிட்டல் வங்கி சேவையின் மூலம் காசோலை ரசீது, காசோலை வரைவோலை போன்ற ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் இனி நடைபெறும்.
இதுகுறித்து, டிஜிட்டல் வங்கி சேவை மையங்கள் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு டிஜிட்டல் வங்கி சேவை மையங்களும் ஒரு வங்கி கிளையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இச்சேவையை வருகின்ற ஜீலை மாதத்திற்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.