அதிகரிக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டியை உயர்த்திய ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி 4.40 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதால் கட்டுப்படுத்துவதற்காக வட்டியை உயர்த்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வீடு, வாகன கடன் பெற்றவர்களுக்கு மாதாந்திர தவணை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தீடீர் வட்டி உயர்வால் பங்கு சந்தை முதலீட்டார்கள் இழப்பை சந்திந்தனர்.