இனி டுவிட்டர்க்கு கட்டணம் சேவை: அதிர்ச்சியில் பயனாளர்கள்
அமெரிக்காவின் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டரை ரூ. 3 லட்சத்து 32 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் டிவிட்டரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்க்கப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும், இனி டிவிட்டர் பயனாளர்களுக்கு கட்டண சேவை என்பதையும் தெரிவித்தார். இதனால் டிவிட்டர் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது, தொடர்பாக எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அரசு பயனாளர்கள் மற்றும் தொழில் வணிக அமைப்புகளிடம் இருந்து குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கப்படும். சாதாரண பயனாளர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லை. எப்போதும் போல இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு சாதராண பயனாளர்களுக்கு திருப்தியளித்தாலும் நாளடைவில் கட்டண சேவை அறிவிக்க வாய்ப்புள்ளதால் அச்சத்தில் உள்ளனர்.