அரசு எப்படி சம்பாதிக்கிறது?
அரசுக்கு வரி வருமானம் மற்றும் வரி அல்லாத வருமானம் மூலம் வருவாய் கிடைக்கிறது. அரசு விதிக்கும் வரிகள் நேரடி வரி, மறைமுக வரி என இரண்டு வகைப்படும்.
வருமான வரி, உண்மையான சொத்து வரி, தனிநபர் சொத்து வரி உள்ளிட்டவை நேரடி வரிகளில் அடங்கும். ஜிஎஸ்டி, சுங்க வரி, TDS போன்றவை மறைமுக வரிகளில் அடங்கும். வரி போக இதர வழிகளில் அரசு ஈட்டும் வருமானம் வரி அல்லாத வருமானமாக கருதப்படுகிறது. இதில் பெரும்பாலும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் லாபம், வட்டி, லாபப் பங்கு ஆகியவை அடங்கும்.
ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய் மறைமுக வரி வருவாயாக கருதப்படுகிறது. மறைமுக வரியை வசூலிக்கும் முறையை ஜிஎஸ்டி முழுவதுமாக மாற்றியமைத்துவிட்டது.