வாழ்க்கையில் வெற்றி பெற்ற டிஜிபி கூறிய அட்வைஸ்
மாணவர்கள் தங்களுடைய 16 வயதிலேயே எதிர்காலத்தை குறித்து திட்டமிட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) அவசியமாக இருக்கிறது. நீங்கள் அந்த துறையை தேர்வு செய்யலாம். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகளையும் தேர்வு செய்யலாம்.
போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும். அரசு வேலையாக இருந்தாலும் தமிழ், ஆங்கிலம், கம்ப்யூட்டர் அறிவியல் படிக்க வேண்டும். நான்காவதாக உடல்மொழித்திறனும் பெற்றிருக்க வேண்டும்.
படித்து முடித்தவுடன் பெரிய நிறுவன வேலைக்குத்தான் போவேன் என சொல்லாமல், சிறிய நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் சேர்ந்துகொண்டு திறமையை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்றார்.