பட்ஜெட் பற்றாக்குறை அறியவேண்டிய தகவல்
அரசுக்கு கிடைக்கும் வருவாயை காட்டிலும் செலவு அதிகரிக்கும்போது பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படும்.
இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் போன்ற எதிர்பாரா சூழல்களில் அரசு கூடுதலாக செலவு செய்யும்போதும், பொருளாதாரத்துக்காக சில கொள்கை மாற்றங்களை அறிமுகப் படுத்தப்படும் போதும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு.
வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, முதன்மை பற்றாக்குறை என பற்றாக்குறைகள் மூன்று வகைப்படும்.
ஒட்டுமொத்த வருவாயை வரவை காட்டிலும், வருவாய் செலவு அதிகரிக்கும்போது வருவாய் பற்றாக்குறை ஏற்படும்.
இந்த பற்றாக்குறை ஏற்பட்டால், அரசு தினசரி தேவைகளுக்கே நிதி பற்றாக்குறையில் இருக்கிறது என பொருள்.
வரி மற்றும் இதர வருவாய் மூலம் அரசு ஈட்டும் பணத்தை காட்டிலும் அதிக பணத்தை செலவிட்டால் நிதி பற்றாக்குறை ஏற்படும். வட்டி போக அரசு வாங்கிய கடன் தொகையே முதன்மை பற்றாக்குறை.