இனி டோல்கேட் பற்றி கவலை வேண்டாம்…
கூகுள் நிறுவனத்தின் மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்புகளுள் ஒன்று கூகுள் மேப். கையில் இது இருந்தால் போது தெரியாத ஊருக்கு கூட சுலபமாக சென்றுவிட்டு வரலாம். அந்த அளவுக்கு பயனர்கள் பயன்படுத்த எளிமையாகவும், புரியும்படியும் அமைக்கப்பட்டு உள்ளது இந்த கூகுள் மேப் சேவை.
எண்ணற்ற அம்சங்களை கொண்ட கூகுள் மேப் செயலி, தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை முன்கூட்டிய தெரிந்து கொள்ளும் வசதியை கூகுள் நிறுவனம் புது அப்டேட்டாக வெளியிட்டுள்ளது. இதுதவிர சுங்கச்சாவடிகளை தவிர்க்க விரும்புவோர்க்கு வேறு பாதையை காட்டும் புதிய அம்சமும் தற்போதைய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளன.