மோட்டிவேஷன் தேவைதானா?
நமக்கு நல்லது எனும் விஷயத்தை நம்முடைய மனது விரும்பாத போதும்கூட செய்ய எத்தனிப்பதற்குத் தேவையானது தான் மோட்டிவேஷன். வெறும் மோட்டிவேஷன் மட்டுமே உங்களை சாதனையாளராக்காது. செயல்களே உங்களை சாதனை யாளர்களாக ஆக்கும். இந்த உலகில் மோட்டிவேஷனுடன் பிறந்தவர்கள் என ஒருவரும் கிடையாது. மோட்டிவேஷனை நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியாது என்றாலும், அது சார்ந்த பல விஷயங்களை நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியும்.
சின்னச் சின்ன பல விஷயங்கள் நம்மை மோட்டி வேஷனுக்கான பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திச் செல்லும் வல்லமை பெற்றது. அவமானம் என்பது மோட்டி வேஷனுக்கான பெரிய காரணி என்று நாம் அனைவரும் தவறாக நினைத்துக் கொண்டுள்ளோம். தோல்விக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவுமுறையை மாற்றியமைத்தாலே அது உங்களுடைய மோட்டிவேஷனை அதிகப்படுத்துவதற்கான பெரியதொரு காரணியாக இருக்கும்”. வாழ்க்கையில் பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் எங்கேயிருந்து அதை ஆரம்பிக்க வேண்டும், வலி எனும் உணர்வை எப்படிக் கையாள வேண்டும், நாம் பேசும் வார்த்தைகளை எப்படி பவர் ஃபுல்லான ஒன்றாக ஆக்கிக்கொள்வது, பேரிழப்பு
களை எப்படி எதிர்கொள்வது, தனி நபரின் மனவலிமைக்கு அடிப்படைத் தேவையான விஷயங்கள் என்னென்ன, குறைசொல்பவர்களை எப்படிக் கையாளுவது, நம்பிக்கை
வளர்ப்பது எப்படி என்பது போன்ற பல்வேறு வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும்.