அரசே தடை செய்யல.. அதனால நடிச்சேன்… நடிகர் சரத்குமார்
திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது : ஆன்லைன் ரம்மி தவறு என்றால் அரசே தடை செய்யட்டும் . அரசு தடை செய்தால், ஏன் விளம்பரங்களில் நடிக்க வேண்டி வருகிறது? குடிப்பழக்கம் குடியைக் கெடுக்கும் என்பதால், குடிக்காமல் இருக்கிறார்களா? புகைப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு எனும்போது, தயாரிப்பதை ஏன் நிறுத்தவில்லை?
அதுபோல, இணையத்தில் நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், தீயவற்றை விட்டுவிடுங்கள் . நாம் சுயகட்டுப் பாட்டுடன் இருந்தால், அவர்கள் கடையை மூடிவிட்டு போய் விடுவார்கள் . அதை விட்டுவிட்டு, நான் ரம்மி விளம்பரத்தில் நடிப்பதால்தான் மக்கள் கெட்டுப் போகிறார்கள் என்பதை ஏற்க முடியாது என்றார்