புதிய தொழில்முனைவோருக்கான கேள்வி-பதில்
முத்ரா திட்ட கடனுதவிக்கும் ஏனைய கடன் திட்ட உதவிக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: முத்ரா கடன் திட்டம் குறைந்த கடன் அனுமதி மற்றும் குறுகிய கால அளவீடு, மேலும் முத்ரா கடனுதவிக்கு மானியம் கிடையாது.
பலதரப்பட்ட தயாரிப்பு பொருட்கள் வாங்கி விற்பதற்கு கடனுதவிகள் கிடைக்குமா?
பதில்: நீங்கள் தேர்ந்தெ டுக்கும் பொருட் களின் விற்பனை வாய்ப்பின் அடிப்ப டையிலும், விற்பனை யின் திறன் அடிப்படையிலும் கடன் வழங்கும் நிறுவனத்தின் திறனாய்வில் தேர்வு பெற்றால் கடனுதவி கிடைக்கும்.
மாறிவரும் தொழில்திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி எங்கு எப்படி தெரிந்து கொள்வது?
பதில்:MSME-யின் வலைதளத்தில் மாவட்ட தொழில் மைய அலுவல கங்களிலும் விபரங்களைப் பெறலாம்.
புதிய தொழிலை தேர்ந்தெடுக்க தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலை எங்கு பெறலாம்?
பதில் : திருச்சிராப்பள்ளி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் (டிடிட்சியா) அரியமங்கலத்தில் உள்ளது. அங்கு பெறலாம்.
செய்யும் தொழில் தொய்வும் தோல்வியும் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்கும் திறனை எங்கு கற்று கொள்ளலாம்?
பதில்: திருச்சி அரிய மங்கலத்தில் தமிழ்நாடு அரசின் EDII நிறுவனத்தின் மூலமாக ENTERPRENEUR CLINIC என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது.