ஒரு மொபைல் நம்பரிலிருந்து அதிகபட்சமாக 3 பதிவுகள்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அவர்களை நேரடியாகச் சென்று சேரும் வகையில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி மத்திய அரசு புதிய வெப்சைட் ஒன்றை தொடங்கியது. தொடங்கிய ஒரு மாதத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த வெப்சைட்டில் பதிவு செய்ய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கட்டாயமாகும்.
அதே வேளையில் ஒரு மொபைல் நம்பரிலிருந்து எத்தனை பதிவு செய்யலாம் என பலரும் கேள்வி எழுப்பினர். இது குறித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஒரு மொபைல் நம்பரில் இருந்து அதிகபட்சமாக 3 பதிவுகள் மட்டுமே செய்ய முடியும். அதேபோல, கிராம அளவிலான தொழில்முனைவோர்களின் பயனாளியின் மொபைல் நம்பரை வழங்க வேண்டுமே தவிர, தங்களது சொந்த மொபைல் நம்பரை வழங்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மொபைல் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதும் கட்டாயமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.