நெட் ஜீரோ..!
ஒரு நாடு உற்பத்தி செய்யப்படும் கிரீன்ஹவுஸ் வாயு அளவிற்கும், வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்பட்ட கிரீன்ஹவுஸ் வாயு அளவிற்கும் இடையேயான சமநிலை தான் நெட் ஜீரோ. இதைச் செயல்படுத்த முதலில் கிரீன்ஹவுஸ் வாயு உற்பத்தியைப் பெரிய அளவில் குறைக்க வேண்டும் என்பதே தற்போது உலக நாடுகளின் முக்கிய இலக்காக உள்ளது.
இந்தியா நெட் ஜீரோ இலக்கை அடைய எடுக்கும் முயற்சிகள் மூலம் மட்டுமே 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள், 2070க்குள் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனக் கணித்துள்ளது உலகப் பொருளாதார அமைப்பு (WEF). 2070ஆம் ஆண்டு வரையிலான இந்தியாவின் Decarbonisation பயணத்தின் மூலம் சுமார் 15 டிரில்லியன் டாலர் அளவிலான பொருளாதாரத் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.