செலவில்லாமல் பிசினசை வளர்க்கும் முறை
ஒரு பிசினஸ் நடத்த முதலீடு மட்டுமல்ல, மார்க்கெட்டிங்கும் முக்கியம் என்பதை அனைவரும் அறிவர். மார்க்கெட்டிங் செய்வது சிலர் வீண்செலவு என்பார்கள். செலவே இல்லாமல் கூட மார்க்கெட்டிங் செய்ய முடியும். இதை ஜீரோ காஸ்ட் மார்க்கெட்டிங் என்பர். முதலில் உங்கள் பொருள் யாருக்கானது, எந்த வயதினர் பயன்படுத்துகின்றனர், எப்படி அவர்களை சென்றடைய முடியும் என்பதை கண்டறிய வேண்டும்.
வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்களை பயன்படுத்த வேண்டும். அனைத்து சமூகவளைதள பக்கங்களிலும் உங்கள் பொருள் குறித்த சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசி, பொருள் வாங்க ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். பின்னர் விளம்பரங்களை பகிர வேண்டும். மேலும் உங்கள் நிறுவனம் குறித்த வெப்சைட் ஆரம்பித்து விவரங்கள் வெளியிட வேண்டும்.
அந்த வெப்சைட்டில் உங்கள் நிறுவனத்தின் பொருள் குறித்த தேவை, உங்கள் பிரச்னைக்கு எப்படி தீர்வாக அமையும் என்பதை விவரித்து உங்கள் பிராண்டை விவரித்தால் வாடிக்கையாளரை எளிதில் கவர முடியும். உங்கள் பொருள் நன்றாக இருக்கிறதென சொல்லப்படும் வாய்மொழி விளம்பரமே நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
தற்போதைய பிசினஸ் ஆன்லைன் மூலம் நடைபெறுவதால் உங்கள் நிறுவனம் சார்பாக ஆன்லைன் மூலம் சிறு ஈவென்ட்டுகள்(நிகழ்ச்சிகள்), ப்ரி வெப்மினார்கள் நடத்தி பின்னர் மக்களை கவர்ந்த பிறகு அதையும் கட்டணமாக மாற்றுவதன் மூலம் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும்.
உங்கள் பொருட்களை பயன்படுத்தியவர்களிடம், அது குறித்து மற்றவர்களுக்கு பரிந்துரை செய்தால் சிறு பரிசு தருவதன் மூலம் உங்கள் நிறுவன வளர்ச்சிக்கு துணையாக இருக்கும். உங்களுக்கும் டபுள் புரோமோஷனாக இருக்கும்.