“உலகளவில் ஒரே ஆண்டில் அதிக வருமானம் பார்த்தவர் அதானி”
அதானி குழுமம் இந்தியாவில் துறை முகங்கள், விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களை தங்கள் வசப்படுத்தி வருகின்றன. அத்துடன் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க தொழிலில் கால்பதிக்க உள்ளன.
அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் 96%, அதானி என்டர்பிரைசஸ் 90%, அதானி மின் நிறுவனம், துறைமுகங்கள் போன்றவை 52% என இந்தாண்டு வருவாய் ஈட்டி உள்ளன. அதானியின் நிகர சொத்து மதிப்பு 2021-ம் ஆண்டில் 1.17 லட்சம் கோடி உயர்ந்து 3.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவர் உலகளவில் இந்தாண்டின் மிகப்பெரிய அளவில் வருமானம் பார்த்த நபர் என ‘ப்ளும்பெர்க்‘ அறிவித்துள்ளது.